Day 11 - A few poems...
Saying something that affects the reader's heart so much can be done only by very few poets. Thaboo shankar is one of them. His கவிதைகள்(poems) have touched my heart so much. They cannot be termed poems in the real sense but they have a poetic touch in them. The fact that most of his(all that I have read) poems are based on love makes them more romantic. His poems are generally directed towards an imaginery lover. The stories in his poems make you feel like "Why aren't such things happening in our life?"
Here is one for example. This is what is scribbled by the guy on the birthday present he gives her...
பிறந்தநாள்
எல்லா நாட்களும் வருதப்படுகின்றன
உன் பிறந்த நாளாய் பிறந்திருக்க கூடாதா என்று...
Some other poems that I read recently from a book of Leo da Mirci are below.
பொய்
இரண்டாவது ஹார்ட் அட்டாக்கே சீரியஸ் என்கிறது மருத்துவம்...
சுத்த பொய்!!
நான் எத்தனை முறை உன்னை பார்த்திருப்பேன்?
கஷ்டமான கேள்வி
என் கண்கள் தினமும் எத்தனை முறை இமைக்கும் -
கேட்டால் சொல்லிவிடுவேன்...
உன்னை தினமும் எத்தனை முறை நினைக்கிறேன்
என்றல்லவா கேட்கிறாய்!!
கற்பனை
என் கற்பனை வளத்தை கொன்றவள் நீ
என் கற்பனைகள் உன்னைத் தாண்டிச் செல்ல மறுக்கின்றன...
காலங்கள்...
நீ என் முன் வரும் காலம் தான் - எனக்கு வருங்காலம்.
நம் சந்திப்பு நிகழும் காலம் தான் - எனக்கு நிகழ்காலம்.
நீ காதலை மறுத்தால் மட்டுமே நிகழும் - எனக்கு இறந்த காலம்.
கனவில் ஒரு கேள்வி
நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பினாய்...
ஏனொ மருத்துவம் சம்பந்தமாக கேள்வி கேட்கிறேன் என்றாய்.
"உன் உடல் symmetricஆ?" என்று கேட்டாய்.
"ஆம்" என்றேன் சிந்திக்காமல்.
"இல்லை.இதயம் இடது பக்கம்" என்றாய் -
என்னை வென்ற பெருமிதத்துடன்...
"என்னிடம் வலது பக்கமும் இருக்கிறது, உன் இதயம்" என்றேன்.
வெட்கப்பட்டாய்...
"வெட்கம் கூட இப்படி வெட்கப்பட்டிருக்காது" என்றேன்.
"காதல் கூட இப்படி காதலித்திருக்காது" என்றாய் -
இன்னும் வெட்கத்துடன்.
அலார மணியோசை நீ சொன்னதை உறுதிப்படுத்தியது.
தீவிரவாதம்
பார்வையில் அணுஅணுவாய் கதிர்வீச்சு பாய்தல்
விடைகள் கேட்டு விழி அம்பு எய்தல்
காகிதம் இன்றி (கேள்விக்)கணை தொடுத்தல்
உன் நினைவுச் சிறையில் என்னை அடைத்தல்
மோகம் பாய்தல் தேகம் சாய்தல்
உள்ளம் கடத்தல் உயிர் கொய்தல்
என் மனதில் தீவிர வாதம்...காதல் தீவிரவாதமா?
அத்திப்பூ
பார்த்த நாள் முதல் - தினமும் பூத்தது!!!
அத்தி பூத்தது...உன்னை பார்த்தது